தமிழக அரசு கடன் பெறும் வழிகள் என்ன? மக்கள் பணம் முதல் சந்தைக் கடன் வரை ஓர் எளிய விளக்கம்
தமிழக அரசு புதிய சாலைகள் அமைக்கவும், குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தவும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்தவும், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும் நிதி தேவைப்படுகிறது. இந்தச் செலவுகளுக்கான பணம் முழுவதும் வரி வருவாய் மற்றும் அரசின் பிற வருவாய்கள் மூலமாகவே கிடைத்துவிடுவதில்லை. வருவாயை விடச் செலவுகள் அதிகமாகும்போது, அரசு பல்வேறு வழிகளில் கடன் பெற வேண்டியிருக்கிறது. ஆனால், தமிழக அரசு யாரிடம் கடன் வாங்குகிறது? வங்கிகளிடமா, மத்திய அரசிடமா, பொதுமக்களிடமா? அந்தக் கடனுக்கு வட்டி எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? வாங்கிய கடனை அரசு எப்படித் திருப்பிச் செலுத்துகிறது? இவற்றைப் புரிந்துகொள்வது மாநிலத்தின் நிதிநிலையை மதிப்பிடுவதற்கு அவசியம்.
